Sunday, 14 December 2014

என்னைத்தவிர தேவன் இல்லை - அது யார்

    ஏசாயா45 அதிகாரம்
    5. நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

    6. என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

    7. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

இயேசு விருத்த சேதனம் செய்து உள்ளார்

லூக்கா 2:21 பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்

    ஆதியாகமம் 17 : 23. 
    அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.

இயேசு கடவுளா அல்லது தூதரா ?

இயேசு அழைக்கிறார் 
இதோ இயேசு சீக்கிரம் வருகிறார் 

அதற்கு முன் அவர் கூறியவாறு
நடந்து கொள்ளுங்கள் 

மாத்தியூ  அதிகாரம் 7 வசனம் 21: 
பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் (கடவுளின் ) சித்தபடி 
செய்கிறவனே பரலோக ராஜியத்தில் (சுவர்க்கத்தில் ) 
பிரவேசிப்பானே எல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே 
கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை 

பைபிளில் ஏதாவது இடத்தில் இயேசு தன்னை கடவுள் 
என்று கூறியுள்ளாரா ? அல்லது அவ்வாறு அதில் இருக்கிறதா ?